பாரதி கல்லூரியின் வளர்ச்சிக் குறிப்பு
1952-1953:- பதுளை மொடர்ன் தியேட்டர் உரிமையாளர் திரு.ம. ரட்ணசாமியை தலைவராகவும் திரு ம. ஆறுமுகராசாவை செயலாளராகவும் கொண்ட பதுளை சைவ பரிபாலன சங்கத்தில் உறுப்பினர் ஆதல் பதுளையில் ஓர் இந்துக்கல்லூரியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் சைவ பரிபாலன சங்கம் தற்போது சரஸ்வதி மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடத்தை சொந்தமாக வாங்கியது உடனடியாக இந்த இடத்தில் தற்காலிகமாக ஓருபாடசாலையை நிறுவ வேண்டும் என்று செயலாளர் திரு. ஆறுமுகராசாவிடம் திரு. இராமசாமி வற்புறுத்தல். அது நிறைவேறாமல் போகவே தானே ஒரு பாடசாலையை எங்காவது அமைக்கவேண்டும் என்ற நோக்கம் இவரிடம் துளிர்விடல்.
1953-1956:- எழுத்தாளர் மு.வெ.பெ.சாமி, திரு அ. தங்கராசன,; திரு ஜே.சற்குருநாதன் ஆகியோருடன் இணைந்து திருக்குறள் மன்றத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தியதுடன் இலக்கிய பணிகளுக்கு ஊக்கமூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தியமை
1956-1957:- பதுளை மாணிக்க விநாயக கதிர்வேலாயுத சுவாமி கோயிக்குச் சொந்தமான சிறிய கோயில் ஒன்று பதுளை இரண்டாம் கட்டை பசறை வீதியில் அமைந்திருந்தது இது மடமாகவும் பாவிக்கப்பட்டது.
இதனை கண்ணுற்ற திரு.க.இராமசாமி அவர்கள் திரு.பெரி கந்தசாமியுடன் சேர்ந்து இக்கோயிலின் மேலாளராக இருந்த பதுளை மொடர்ன் தியேட்டர் உரிமையாளர் திரு.மு.ரட்ணசாமியிடம் இக் கோயில் கட்டிடத்தை ஒரு பாடசாலையாக மாற்றியமைக்க அநுமதி கோரினார். இக் கோயில் கட்டிடத்தை கல்விச் செயற்பாடுகளுக்கு மட்டுமே பாவிக்க வேண்டும் என்ற உறுதி மொழியை பெற்றுக் கொண்டு திரு.மு.ரட்ணசாமி பாடசாலை நடாத்த அனுமதி வழங்கினார்.
17.01.1957 : இத் திகதியன்று “பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்" என்ற வாசகத்துடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.அன்று வருகைத்தந்த மாணவர் தொகை ஆறு பேர் மட்டுமே. இலங்கை வானொலிக் கலைஞர் சரஸ்வதி திருச்சிற்றம்லத்தின் வீணை இசையுடனும் பாவோதலுடனும் பாடசாலை தொடங்கியது.
ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள்நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தமிழரை சிந்திக்க வைத்த, அவர்களின் பின் தங்கிய நிலையைக் கண்டு வேதனைப்பட்ட பாரதியாரின் நினைவாக இப்பாடசாலைக்கு “பாரதி கல்லூரி” எனப் பெயரிடப்பட்டது.
அக்காலத்தில் பாரதியின் பெயர் கொண்ட ஒரு பாடசாலை கூட எங்குமே இருக்கவில்லை.
திரு இராமசாமியுடன் கவிஞர் தமிழோவியன் .திரு.சின்னையா,திரு.இராமநாதன் (எழுத்தாளர் மல்லிகைக் காதலனின் சகோதரர்).செல்வி எஸ்.யோகேஸ்வரி,திருமதி.சிவகாமி கந்தசாமி ஆகியோர் ஆசிரியர்களாக கடமையாற்றினர்.
பாடசாலை நிர்வாகம் தொடர்பான அறிவுரைகளை பதுளை முஸ்லிம் வித்தியாலய அதிபர் கவிஞர் அப்துல் காதர் லெப்பையிடம் கேட்டறிந்தார்.
பாடசாலை தொடங்கி ஒருமாதத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் குன்றக்குடி அடிகளார்.எழுத்தாளர் வு.மு.சீனிவாசன் ஆகியோர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டனர்.அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் விரிவுரைகளும் ஆற்றினர்.
1958 இல் பாரதி கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.இதன் நினைவாக ‘பாரதி’ என்ற மலர் வெளியிடப்பட்டது.
இம்மலருக்கான வாழ்த்தரைகள் இந்திய உப ஜனாதிபதி டொக்டர் ளு.ராதாகிருஸணன், பாரதியாரின் உயிர்ச் சினேகிதர் பரலி சு.நெல்லையப்பர், ராமகிருஸ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி சித்பவாநந்தர், பிரேமானந்த சுவாமிகள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்றன.
இந்நிறைவு விழாவிற்குத் திரு எஸ்.தொண்டமான்,பதுளை அரசாங்கஉப அதிபர் திரு அ.தட்சணாமூர்த்தி ,யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமாகிய 'தேவன்"எனப்பட்ட மகாதேவன் பதுளை பாராளுமன்ற உறுப்பினர் திரு து.ஊ.வு கொத்தலாவலை,முந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமாகிய திரு ளு .ஆசுப்பையா கல்வி அதிகாரி திரு சீமான் பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
1959-இரண்டாம் ஆண்டு நிறைவு விழாகொண்டாடப்பட்டது. இவ் விழாவில்
1.அகில இலங்கைத் தமிழ் பத்திரிகைகளின் கண்காட்சி
2.சோவியத் குழந்தைகள் கண்காட்சி
3.ஏபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிகள் என்பன இடம் பெற்றன.
இக் கண்காட்சியைத் திறந்து வைத்து மலர் வெளியீடு செய்தவர் பதுளை உதவி அரசாங்க அதிபர் திரு. நெவில்ஜயவீர ஆவார்.
1959-1960- இக் காலகட்டத்தில் திரு இராமசாமி அவர்களின் முயற்சியால் பதுளையில் இருந்து மூன்று மாணவர்களும் இரண்டு மாணவிகளும்; யாழ்ப்பாண பாடசாலைகளி;ல் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் கற்க அனுமதிக்கப்பட்டனர் இரண்டு மாணவிகளும் சிறிது காலத்தின் பின்னர் பாடசாலையில் இருந்து விலகி விட்டனர். ஆனால் மூன்று மாணவர்களும் தொடர்ந்து படித்து பேராதனைப்பல்கலைகழகத்தில் அனுமதி பெற்று பட்டதாரிகள் ஆயினர்.
மேலும் இவரது முயற்சியால் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இயங்கிய காந்தி சேவா சங்கத்தின் காந்தி நிலையத்தில் தொழிற்கல்வி கற்பதற்காக கிட்டதட்ட பத்து ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு எல்லாம் இலவசமாகவே வழங்கப்பட்டது. இதன் பொறுப்பாளராக திரு.வேலாயுதபிள்ளை விளங்கினார். ஆயினும் இம்மாணவர்கள் இடையிடையே இங்கிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.
மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 17-07-1960ல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திரு.மு.ராஜலிங்கம் அவர்களும் கண்டி அசோகா வித்தியாளய அதிபர் திரு P.வு ராஜனும் வருகை தந்திருந்தார்.
1962-1963 இக்கால கட்டத்தில் “தேயிலை தோட்டத்திலே” என்ற பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். இலங்கை இந்தியர்களின் பிரஜா உரிமை பிரச்சினை பதுளைப் பாடசாலைகளின் மறுசீரமைப்பு (சுநழசபயnளையளாழைn) பிரச்சினை போன்றவற்றைப் பற்றி காரசாரமாக விவாதித்தார். இது கிட்டத்தட்ட 4 முறை வெளியானதன் பின்னர் நின்று போயிற்று.
1967: பாரதி கல்லூரியின் 10ம் ஆண்டு நிறைவு விழா 12.09.1967 அன்று மிகச்கிறப்பாக கொண்டாடப்பட்டது. மகாகவி பாரதியாரின் பேத்தியான திருமதிசு. விஜயபாரதி அவரது கணவர் பேராசிரியர் மு.சுந்தரராஜன் ஆகியோரும் தமிழ் நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளரான கு.அழகிரிசாமியும் இத்தினத்தன்று வருகை தந்து சிறப்பித்தனர்
10ம் ஆண்டு நினைவாக அகில இலங்கை தமிழ் கவிதைப் போட்டி நடாத்தப்பட்டு திரு. காரை சுந்தரம் பிள்ளை முதற் பரிசு பெற்றார்.
மேலும் இதே ஆண்டு பாரதி மாணவர்க்கான 8 நாள் அகில இலங்கை சுற்றுலா நடைபெற்றது.
பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக பதுளை மாவட்டத தோட்டப்பாடசாலைகளின் விளையாட்டு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். இதில் பெரும்பாலான தோட்டப்பாடசாலைகள் பங்குபற்றின. பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள் மிக உற்சாகத்துடன் போட்டியிட்டனர்.தோட்ட நிர்வாகங்களும் இதற்கு முழு ஒத்துழைப்பை நல்கின போட்டியை பாரதி கல்லூரி மிகச் சிறப்பாக நடாத்திக்காட்டியது.
1968 பாரதியில் வகுப்புகள் 8ம் வகுப்புவரை தரமுயர்த்தப்பட்டன. பாடசாலை மாணவர்கள் பதுளையில் நடைபெற்ற பல சமய, தமிழ் மொழிப் போட்டிகளில் பங்கு பற்றி பெரிய பாடசாலைகளை வீழ்த்திப்பல முதலிடங்களை பெற்றனர்.
வெளிமடை பம்பரப்பனையில் இளங்கோ மன்றம் என்ற பெயரில் திரு.ளு.P.மு. வேலாயுதம் என்பவர் மாணவர்க்கு மேலதிக வகுப்புகள் (வுரவைழைn) நடாத்தி வந்தார்.
இதனை அறிந்த திரு.இராமசாமி அவர்கள் அதனை பொறுப்பேற்று பம்பரப்பனைப் பாரதி வித்தியாலயம் என பெயரிட்டு பாரதி கல்லூரியிலிருந்து சில ஆசிரியர்களை அங்கே ஆசிரியர்களாக அனுப்பி க.பொ.த சாதாரணதரம் வரை வகுப்புக்களை நடத்தினார்.
இப்பாடசாலையில் கற்று க.பொ.த(சா.த) சித்தியடைந்த யு.தியாகராஜா என்ற தோட்டப்பகுதி மாணவர் வெளிமடை சென்று கபொ.த(உ.த) வகுப்பில் கற்றுச்சித்தியடைந்து பேராதனை பல்கலைகழகம் சென்று சிறந்த பெறு பேறு பெற்று விரிவுரையாளர் ஆனார். அங்கிருந்து புலமை பரிசில் பெற்று கனடா சென்று இப்போது அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
1970ன் பின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாடசாலையை நடாத்துவதில் நெருக்கடி ஏற்பட்டதால் அரசினரிடம் கையளிக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். 1960 முதலே இந்த நோக்கம் அவர் மனதில் இருந்தது. ஆகவே பதுளை பாராளுமன்ற உறுப்பினர் திரு.டீ.ர்.பண்டார , ஜனநாயக்கத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.யு.அசீஸ் ஆகியோரின் முயற்சியால் பாடசாலை 1975ல் அரசரினால் பொறுப்பேற்கப்பட்டது.
;ஆயினும் இங்கு பல வருடங்களாகச் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு அரசினர் நியமனம் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன ஆகவே அக்காலகட்டத்தில் கல்வி அமைச்சின் பணிப்பாளராக விளங்கிய திரு யு.சமீம் (இவர் திரு இராமசாமியின் பள்ளி தோழராவார்) மற்றும் கல்வி அமைச்சின் தமிழ் பிரிவுத் தலைவராக விளங்கிய திரு இலச்சுமண ஐயர் ஆகியோர் உதவியால் இவர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்க வழி ஏற்பட்டது. ஆகவே இங்கு சேவையாற்றிய பின்வரும் ஆசிரியர்கள் 03-08-1976 முதல் அரசினல் நியமனம் பெற்றார்.
அவர்கள் பெயர்கள் பின்வருமாறு
1. திரு.ளு.முத்துகருப்பன்
2. திரு.லு.தேவராஜா
3. திரு.ஏ.நடன சபாபதி
4. செல்வி.மு.ஜானகி
5. திருமதி.மு.சந்திரா
6. செல்வி.மு.கலைச்செல்வி
7. திருமதி.ஆ.ராஜேஸ்லரி
8. திரு.யு.ராமசாமி
9. திரு.ஆ.ஆ.வில்சன்
திரு இராமசாமி அவர்கள் அரசினர் நியமனத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரதி மகா வித்தியாலயம் தற்போது சகல துறைகளிலும் சிறப்புற்று தமது 57 வது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும் பாடசாலையின் சூழல் பராமரிப்பிலும் பதுளை வலயமட்டத்தில் முன்னனி பாடசாலையாக திகழ்கிறது. பாடசாலையின் புறக்கிருத்தி வேலைகளில் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து பல பரிசில்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.; நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரீட்சை பெறுபேறுகளை பொறுத்தவரை இறுதியாக வெளியாகிய க.பொ.த (உஃத) பரீட்சைக்கு தோற்றிய 33 மாணவர்களில் 10 மாணவர்கள் பல்கலைகழக தகுதி பெற்றுள்ளனர். தற்போது புதிய பொழிவுடன் காட்சி தரும் இப்பாடசாலைக்கான கட்டிடங்கள் சீடா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதோடு, 90ஓ20 அளவுடைய புதிய மாடிக்கட்டிடம் ஒன்று முதலமைச்சரின் நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்ப்pடத்தக்கது. சுஐநுசுP செயற்றிட்ட வழிகாட்டலின் மூலம் பாடசாலையின் சூழல் மிக சிறந்த முறையில் பேணப்பட்டு வருகிறது. கோட்ட,வலய மட்ட விளையாட்டு போட்டிகளிலும் எமது மாணவர்கள் முன்னனி இடத்தை பெற்றுள்ளனர். அதேப்போல் பல ஸ்தாபனங்களினால் நடாத்தப்பட்ட சித்திர போட்டிகளில் பெருமளவான பரிசில்களை எமது மாணவர்கள் பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும். மேலும் அன்மைய காலங்களில் விளையாட்டுத்துறையில் எமது மாணவர்கள் பல வெற்றிகளை பெற்று பாடசாலைக்கு கீர்த்தியை பெற்றுத்தந்துள்ளதோடு,அத்தோடு 2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியிலே எமது பாடசாலையைச் சேர்ந்த செல்வன். கோகுலன் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். பாடசாலையில் மாணவர் படையணி ஒன்றும் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதோடு, தற்போது இரண்டு குழுக்கள் தங்களது முதலாவது பயிற்சியினை வெற்றிகரமாக பூர்த்திச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய அதிபராக திரு.மு.ரவிக்குமார் அவர்கள் பதவியேற்றதை தொடர்ந்து கடந்த 08.04.2015 அன்று தரம் 7,8,9 ஆகிய வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய சாரணர் குழு ஒன்றும் எமது பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே 30 மாணவத்தலைவர்களுக்கும் சின்னம் அணிவித்து
கௌரவிக்கப்பட்டதுடன். பாடசாலையில் 15 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி. மு.முத்துலிங்கம் அவர்களும் அதிபரால் கௌரவிக்கப்பட்டதுடன் , 2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலே சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவனுக்கும், 2013 ஆம் ஆண்டு இடம் பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையிலே தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய இரண்டு மாணவிகளுக்கும் அதிபரின் தலைமையில் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் 2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சையிலே தோற்றி இரண்டு மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருப்பதுடன், 2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் 20 வருடங்களுக்கு பின் ஞானராஜ் கிஷோன் என்ற மாணவன் 9யு சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடி தந்ததோடு க.பொ.த உயர் தரத்தில் 2020 ஆம் ஆண்டு அடைய எதிர்பார்த்திருக்கும் 85மூ ம் என்ற இலக்கை 2016 ஆம் ஆண்டிலேயே எமது பாடசாலை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலைக்கு இந்த குறிப்பட்ட காலப்பகுதியில் பல வளங்கள் கிடைத்துள்ளது. கனணிகள் ,நிழற்பிரதி இயந்திரம், மனையியல் அறைக்கான உபகரணங்கள், ஆரடவiஅநனயை உபகரணம், விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு என்பன கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் 2019 ஆம் ஆண்டு பேண்ட் குழுவுக்கான வாத்தியக்கருவிகள், சங்கீத இசைக்கருவிகள், மலசல கூட தொகுதிகள் என்பவற்றோடு“அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய திருத்த வேலைப்பாடுகள் பல பாடசாலையில் இடம் பெற்றது. அத்தோடு உள்ளக பாதையும் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள்
நான்கு மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமைத்தேடி தந்துள்ளனர்.
2020 மற்றும் 2021 ஆம் வருடங்கள் கொவிட் 19 நோய்தாக்கம் காரணமாக பாடசாலைகளுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும் 2020 ஆம் ஆண்டிற்கான உயர்தரப்பரீட்சையில் தோற்றி எமது பாடசாலையிலிருந்து 3 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. அத்தோடு 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 7யுடீ என்ற சிறந்த பெறுபேறும் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, ருளுயுஐனு நிறுவனத்தினரால் எமது பாடசாலைக்கு சுமார் 350000டு நீரை சேமிக்கக் கூடிய மழைநீர் சேகரிப்பு தாங்கியொன்றும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி அமைச்சினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக 49 வுநடி சாதணங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான குiடிநச இணைய வசதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.